சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
சாப்பிடும்போது பேசினால் மூச்சுத்திணறல் ஏற்படுவது எதனால்?.. உண்மையை தெரிந்து உஷாராகுங்கள் மக்களே.!
நாம் சாப்பிடும் விஷயங்களில் எப்படி சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பதற்கான கட்டமைப்புகள் இருக்கின்றன. முன்னோர்கள் நாம் சாப்பிடும் போது யாரிடமும் பேச வேண்டாம் என கூறி வந்தனர்.
ஏனெனில் நாம் சாப்பிட்டுக்கொண்டு பேசுவதால் மூச்சுக்குழல் மற்றும் உணவுக் குழல் வாழ்வுகள் திறந்து மூடும். அப்போது உணவு உணவுப்பாதையை மாற்றி மூச்சுக்குழாய்க்குள் செல்ல வாய்ப்புள்ளது.
இயற்கையாக தனித்தனியாக இருக்கும் வாழ்வுகள் ஒரே நேரத்தில் திறந்து மூடும் பட்சத்தில், நமக்கு தெரியாமலேயே வாயின் வழியே காற்று உள்ளே செல்கிறது. இயற்கையாக தனித்தனியாக அமைந்த வாழ்வுகள் சாப்பிடும் போது பேசுவதால் இரண்டு செயல்களும் ஒன்றாக நடந்து சாப்பாடு மூச்சுக் குழாயில் சென்று மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒருவேளை நாம் சாப்பிடும் போது பேசிக் கொண்டிருப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும் பட்சத்தில், அடுத்த 30 வினாடிகளுக்குள் அவை மூளைக்கு ஆக்சிஜன் செல்வதை தடை படுத்தி மயக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மூச்சு திணறல் வந்த நபர் மயக்க நிலைக்கும் சென்று விடுவார். அவருக்கு முதலுதவி கொடுக்காத பட்சத்தில் மரணம் கூட ஏற்படும்.
சாப்பிடும் போது நன்றாக மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும். இதனால் தொண்டையில் நாம் சாப்பிடும் உணவு அடைபடும் நிகழ்வு தடுக்கப்படும். கொஞ்சம் கொஞ்சமாக உணவை மென்று சாப்பிட வேண்டும். ஒரேடியாக வாயில் உணவை திணித்து சாப்பிடுவது கூடாது.