#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோவிலுக்கு சென்றால் மறந்தும்கூட இந்த செயல்களை செய்துவிடாதீர்கள்! உடனே படிங்க!
கோவில்களுக்கு செல்லும்போது ஒருசில செயல்களை கட்டாயம் செய்ய கூடாது என்கிறது சாஸ்த்திரம். அது என்னென்ன செயல்கள் என்று இங்கு பார்க்கலாம் வாங்க.
சிலருக்கு அமைதியான இடத்தை பார்த்தல் தூக்கம் வந்துவிடும். இதுபோன்று கோவில்களில் கட்டாயம் தூங்க கூடாது. மேலும், வெளிச்சம் இல்லாத சமயத்தில் இறைவனை வழிபட கூடாது.
நந்தி பீடம், பலிபீடம் இவற்றை நிழலை தப்பித்தவறி கூட மிதித்துவிட கூடாதாம். கோவில்களில் அபிஷேகம் நடக்கும் நேரத்தில் கோவிலை சுற்றிவர கூடாது என்றும் சொல்கின்றனர்.
குளிக்காமல் கட்டாயம் கோயிலுக்குப் போகக்கூடாது. கோவிலில் இருக்கும் நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது. குறிப்பாக கோவில்களில் எந்த ஒரு மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.
கோவிலின் படிகளில் உட்கார கூடாது. கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் கால் கழுவவோ குளிக்கவோ கூடாதாம். சிவன் பெருமான் கோயில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.
வாசனை இல்லாத மலர்களை கட்டாயம் இறைவனுக்கு படைக்க கூடாது. கிரகண நேரங்களில் இறைவனை வழிபடக்கூடாது. கோவில்களில் மற்றவர்களுடன் வீண் வார்த்தைகள் பேசக்கூடாது.