மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் கொழுப்பை கரைக்க உதவும் கோதுமை மிளகு தோசை செய்வது எப்படி?..!
கோதுமையில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்து மிகவும் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு எளிதில் செரிமானமடைய உதவுகிறது. தொடர்ந்து கோதுமையால் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பை கரைக்க முடியும்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் -1
எண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - அரை கப்
கோதுமை மாவு - 2 கப்
செய்முறை :
★முதலில் மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பின் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
★அடுத்து ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
★இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்த மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சூடான, சுவையான கோதுமை வெங்காயம் மிளகு தோசை தயாராகிவிடும்.