தினமும் ஒயின் குடிப்பது நல்லதா! கெட்டதா! - ஆய்வில் வெளியான உண்மை!
உண்மையில் ஒயினில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். திராட்சை ரசம் எனப்படும் இது புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இருதயத்தைப் பாதுகாக்கிறது. வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது. மேலும் நீரிழிவு, மூட்டுவாதங்களைத் தடுக்கவும் பயன்படுகிறது.
ஒயின் பானத்தை குடிப்பதால் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் ஒரு சில கெட்ட விஷயங்களும் இருக்கின்றன. அதாவது கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் இந்த மதுபானத்தை உட்கொள்ளும் போது கெட்ட கொழுப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறது.
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படும். அத்தகையோர் ஒயின் சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
ஆனால் அளவோடு மட்டுமே சாப்பிட வேண்டும். அதாவது ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே ஒயின் அருந்தலாம்.