கூந்தல் கருகருவென நீண்டு வளர கருவேப்பிலையை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்க.!?



Recipe and benefits of curry leaves

இளைய தலைமுறையினரின் தலைமுடி உதிர்வு பிரச்சனை

பொதுவாக தலை முடி என்பது பலருக்கும் அழகை தாண்டி தன்னம்பிக்கை தரும் விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் ஊட்டசத்து இல்லாத உணவு பழக்கங்களினாலும், அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினாலும் பலரும் பலவிதமான நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் குறிப்பாக முடி உதிர்வு பிரச்சினை அதிகமாகி ஆண்களுக்கு 25 வயதிலேயே வழுக்கைத் தலை பிரச்சனை ஏற்படுகிறது.

Curry leaves

முடி உதிர்வை போக்கும் கருவேப்பிலை

இவ்வாறு ஆண்களுக்கும், பெண்களுக்கும் முடி உதிர்வு பிரச்சனை என்பது முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. முடி உதிர்வை போக்குவதற்கு பல ஆங்கில மருந்துகல் இருந்து வந்தாலும், இது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே பலரது வீட்டிலும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் கருவேப்பிலையை தோசையாக செய்து சாப்பிட்டு வர முடி உதிர்வு பிரச்சனை நீங்குவதோடு, உடலுக்கு தேவையான ஊட்டசத்தும் கிடைக்கும். இந்த கருவேப்பிலை தோசையை எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனையா.! தலையில் வழுக்கை விழாமல் இருக்க இதை ட்ரை பண்ணி பாருங்க.!?

கருவேப்பிலை

தோசை செய்ய தேவையான பொருட்கள்கருவேப்பிலை இஞ்சி, பூண்டு சின்ன வெங்காயம் சீரகம், உப்பு எண்ணெய் இட்லி அரிசி உளுத்தம் பருப்பு, பச்சரிசி வர மிளகாய்

செய்முறை

முதலில் இட்லி அரிசி, உளுத்தம் பருப்பு, பச்சரிசி மூன்றையும் எடுத்து ஊற வைத்து கொள்ள வேண்டும். நன்றாக ஊறிய  பின்பு தோசை மாவு பதத்திற்கு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Curry leaves

இந்த கலவை நன்றாக ஆறிய  பின்பு மிக்ஸி ஜாரில் கலந்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து எடுத்து தோசை மாவில் கலந்து விடவும். பின்னர் தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசையாக வார்த்து எடுத்தால் சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு பிடித்தமான, ஊட்டச்சத்து நிறைந்த கருவேப்பிலை தோசை தயார். இந்த தோசையை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு குறைந்த கருகருவன நீண்டு வளரும்.

இதையும் படிங்க: இந்த நோய் இருப்பவர்கள் சப்பாத்தி சாப்பிடுவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.! ஏன் தெரியுமா.!?