சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
ஆம் ஆத்மி வேற லெவல்.. பஞ்சாபில் ஆட்சியை பிடிப்பது யார்.?

பஞ்சாபில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ், பா.ஜ- கூட்டணி, சிரோமணி அகாலிதளம், ஆம்ஆத்மி உள்ளிட்ட காட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்துவருகிறது.
தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆம் ஆத்மி 85 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், அகாலிதளம் 10 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பஞ்சாபில் ஆட்சி அமைக்க 59 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 85 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதால், அங்கு ஆட்சியை கைப்பற்றும் நிலையை எட்டியுள்ளது இது ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.