அவர் ஒரு மிக சிறந்த நடிகர்! நடிகை குஷ்பு யாரை சொன்னார் தெரியுமா?



Actress kushboo said modi is the best actor

நடிகை குஷ்பூ. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை குஷ்பூ.

சினிமாவை விட்டு விலகிய குஷ்பூ பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அகில இந்திய காங்கிரசில் தன்னை அர்பணித்துக்கொண்டார் நடிகை குஷ்பூ. தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்துவருகிறார்.

actress kushboo

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஷ்பூ தனது அரசியல் அனுபவம் பற்றியும், அரசியல் சூழ்நிலை பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அணைத்து கேள்விகளுக்கும் சுவாரசியமா பதில் அளித்தார் நடிகை குஷ்பூ. அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மோடி பற்றி குஷ்புவிடம் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகை குஷ்பூ மோடி ஒரு மிக சிறந்த நடிகர் என பதில் அளித்தார். இவரது இந்த பதிலால் அதிர்ச்சியில் உள்ளனர் பாஜகவினர்.