96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை திரும்ப பெறும் முடிவில் ஓ.பன்னீர்செல்வம்? - அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பாஜக வேட்பாளரை அறிவிக்கும் பட்சத்தில், தனது தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள இடைதேர்தலால், அங்குள்ள அரசியல்களம் பரபரப்புடன் இருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில், அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருவதால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தென்னரசுவை வேட்பாளராக அறிவித்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பு நேற்று இரவு செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்து இருந்தது.
இந்த விஷயம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கையில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து வேட்பாளரை அறிவித்தால் எங்களின் (அவர்கள் தரப்பு அதிமுக) வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்.
பாஜக தலைவர்களை நாங்கள் சந்திக்கையில், அவர்கள் போட்டியிட்டால் தார்மீக ஆதரவு தருகிறோம் என பேசினோம். இன்று நாங்கள் போட்டியிடுவதாக வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு ஏதும் வரவில்லை. அவர்கள் வேட்பாளரை அறிவித்தால், நாங்கள் அளித்த வாக்குறுதிப்படி எங்களின் வேட்பாளரை திரும்ப பெற்றுக்கொள்வோம்" என தெரிவித்தார்.