"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
"அன்னதானமே தலைசிறந்த அறம்" - 25,000-க்கும் அதிகமான மக்களுக்கு அன்னதானம் வழங்கிய பாஜக வினோஜ் செல்வம்.!
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் மார்ச் எட்டாம் தேதியான நேற்று இரவு முதல் மகா சிவராத்திரி பண்டிகை விமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. சிவாலயங்களில் சிவனுக்கு பிரத்தியேக பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு விடிய விடிய சிவ மந்திரங்கள் ஒலிக்க சிவராத்திரி பண்டிகை சிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பிரதானமான சிவாலயங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் திருவிழாக்கள் முன்னின்று நடத்தப்பட்டன. பல இடங்களில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அந்த வகையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளராக இருந்து வரும் வினோஜ் செல்வம், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முழுவதும் சுமார் 25,000 அதிகமான ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள கோடம்பாக்கம் பரத்வாதேஸ்வரர் திருக்கோவில், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னடி ஸ்ரீ மல்லிகேசுவரர் திருக்கோவில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவட்டீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், அண்ணா நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ அமைந்தகரை ஏகாம்பரஸ்வரர் திருக்கோவில் ஆகிய இடங்களிலும் வினோஜ் செல்வம் சார்பில் அன்னதானம் வழங்கிய சிறப்பிக்கப்பட்டது.