மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தேர்தல் ஆணையம் உறுதி!!
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் மற்றும் மறைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் தொகுதியுமான திருவாரூர், ஏ.கே. போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.மேலும் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஒரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் அமைச்சர் பதவியை இழந்தார். இதனால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது மொத்தம் 21 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்களின் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் நீதிமன்றத்த்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பதவி பறிக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் திருமங்கலத்தை சேர்ந்த வேதா என்ற தாமோதரன் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அந்த வழக்கில் ஆஜரான தேர்தல் ஆணையம் வழக்கறிஞர், காலியாக உள்ள 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு ஏப்ரல் மாதம் 24ம் தேதி வரை அவகாசம் இருப்பதாகவும் ஏப்ரல் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.