மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடநாடு எஸ்டேட் வழக்கில் திருப்பம்..!! சசிகலாவை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டம்..?!!
கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை வழக்கில் சசிகலாவிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப்பகுதியில் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இந்த சம்பவத்தில், கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்த ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட கோத்தகிரி காவல்துறையினர் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி மற்றும் குட்டி என்கிற பிஜின் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு, கொடநாடு வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு மாற்றியது. இதற்கிடையே, கொடநாடு எஸ்டேட் வழக்கில் சசிகலா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.