தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆன்லைன் ரம்மி தடை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை...
ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை, சமீப காலங்களில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி சமீப காலத்தில் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது மிகவும் அவசியம் என்று தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தமிழக முதலமைச்சரிடம், 701 பக்கம் கொண்ட அறிக்கையை கடந்த மாதம் 27-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். இதில் ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை கொண்டு வருவது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.