குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கொலை வழக்கில் சிக்கி ஜாமினில் வந்த அதிமுக பிரமுகர் கொடூர கொலை.. பழிக்குப்பழியாக பயங்கரம்.!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திரிபாதிரிபுலியூர், நவநீதம் நகரில் வசித்து வருபவர் பத்மநாபன் (வயது 48). இவர் அதிமுக பிரமுகர் ஆவார். பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை 28ம் தேதி காலை நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர், இருளஞ்சந்தை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
தகராறில் நடந்த கொலை
அச்சமயம் அவரை காரில் வந்த கும்பல் வழிமறித்த நிலையில், சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச்சென்றது. இந்த விஷயம் குறித்து பாகூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில், கடந்த ஆண்டு கடலூரில் நடைபெற்ற சீமந்த நிகழ்ச்சியில் நடனமாடியது குறித்து பத்மநாபனின் மகன் - தனம் நகர் ஆட்டோ ஓட்டுநரான உறவினர் பாஸ்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: பகுஜன் சமாஜ்வாதி தமிழ்நாடு தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம்; அடுத்த அதிரடி கைது.!
பழிக்கு பழியாக பயங்கரம்
இந்த சம்பவத்தில் பாஸ்கர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்க காத்திருந்த கும்பல், பழிக்கு பழியாக ஜாமினில் விடுதலையாகி வந்த பத்மநாபனை கொலை செய்துள்ளது. பாஸ்கரின் சகோதரர் அன்பு (36), உறவினர்கள் அன்பரசன் (24), நேதாஜி (23), வித்யாதரன் (25) ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அதிமுக கவுன்சிலர் கைது.. தமிழ்நாடு அரசியலில் அடுத்த அதிர்ச்சி.!