தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு.. திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ..



DMK MLA saravanan joined in BJP

திமுக சிட்டிங் எம்.எல்.ஏ திரு. சரவணன் அவர்கள் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமென்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வாக்குறுதி, தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுவருகிறது.

இந்நிலையில் தங்களுக்கு சீட் கிடைக்காத விரக்தியில் ஒருசில முக்கிய புள்ளிகள் தங்காள் இருக்கும் கட்சியில் இருந்து மாற்று கட்சிக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துவரும் திமுக கட்சியியை சேர்ந்த எம்.எல்.ஏ திரு. சரவணன் அவர்கள் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

TN Election 2021

வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இருக்கு சீட் வழங்கப்படாததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தநிலையில் மதுரை மாவட்ட திமுக கோஷ்டி பூசல் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி விரும்பி கேட்காமாலையே அந்த தொகுதியை திமுக கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கியுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ டாக்டர் திரு. சரவணன் மற்றும் ஆதரவாளர்கள் இனி திமுகவில் நீடிக்கவேண்டாம் என நினைத்து தற்போது பாஜக தமிழக தலைவர் முருகன் தலைமையில் இன்று பாஜக வில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவின் முக்கிய புள்ளியும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமாகவும் இருந்த எம்.எல்.ஏ சரவணன் திமுகவில் இருந்து விலகி, பாஜக வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பரை ஏற்படுத்தியுள்ளது.