மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Breaking News : குஜராத்தில் ஆளும் பா.ஜனதா கட்சி 149 தொகுதிகளில் முன்னிலை!.. தொண்டர்கள் கொண்டாட்டம்..!
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தர்நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்களும் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை அங்கு கடந்த 25 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 1 ஆம் தேதி முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இறுதிகட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
தற்போது 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 149 தொகுகளில் ஆளும் பா.ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பா.ஜனதா கட்சியினர் உற்சாகமாக கொண்டாட துவங்கியுள்ளனர்.