சர்ச்சைக்குரிய ஜெயலிதாவின் சிலையை நீக்கிவிட்டு புதிய சிலை திறப்பு! ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பங்கேற்பு



jeyalalitha-new-statue-open

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலையானது இன்று திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் ஏழு அடி உயரமுள்ள வெண்கல சிலையானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டது. இந்த சிலையின் உருவத்தை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன இந்த சிலையானது ஜெயலலிதாவைப் போல இல்லை என்று பலர் கருத்து தெரிவித்தனர். தொண்டர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். இதனை தொடர்ந்து இந்த சிலை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.

jeyalalitha new statue open

இதனைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலையை மீண்டும் கட்சி அலுவலகத்தில் வைத்துள்ளனர். இந்த புதிய சிலை திறப்பு விழாவில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த சிலையை காலை 9:30 மணி அளவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் திறந்து வைக்கின்றனர்.