கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பால் தமிழர்கள் அதிர்ச்சி .. அப்படி என்ன அறிவிப்பு ???



Karnataka CM tells about new dam

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படுவது உறுதி என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால் தமிழர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், மேகதாது அணை கட்டுவதில் தமிழகத்தை சமாதானம் செய்யும் வகையில் விரைவில் தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். ஒரு விவசாயியாக அவர்களின் சிரமத்தை அறிந்ததால், கபினி அணை நிரம்புவதற்கு முன்பே தமிழகத்திற்கு தண்ணீரை விடுவிக்க உத்தரவிட்டேன்.

Latest tamil news

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கலாம். புதிய அணையால் தமிழகம், கர்நாடகா இரண்டு மாநிலங்களுமே பயன்பபெறும். மேட்டூர், பனாவி அணைகள் நிரம்பி, உபரிநீர் கடலில் கலக்க உள்ளன. கூடுதலாக ஒரு அணை இருந்தால் இந்நிலை தவிர்க்கப்படும். மேகதாதுவில் அணை கட்டுவது புதிய திட்டமல்ல. ஏற்கனவே உள்ளது தான். காவிரி நடுவர் மன்றத்தால் கண்டு கொள்ளப்படாத பெங்களூரு நகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய அணை உதவும் என்றார்.

காவிரியில் மேகதாது அணையை 5000 ஏக்கரில், ரூ.6000 கோடி செலவில் கட்டுவதற்கான பூர்வாங்க ஒப்புதலை முந்தைய கர்நாடக அமைச்சரவை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.