திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடு வீடாக சென்று ஓட்டு பிச்சை கேட்பேன்.. நடிகர் மன்சூர் அலிகான்!
18 வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான் வரும் மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
அதன்படி, இன்று அவர் வேலூர் தேர்தல் அலுவலகம் சென்று முதல் ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்திய ஜனநாயக புலிகள் தான் என் கட்சி. ஆனால் இன்னும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு சில மாதங்களாகும்.
தற்போது சுயேட்சையாக தான் இருக்கிறேன். தேர்தல் சின்னமாக பலாப்பழம், கிரிக்கெட் பேட் மற்றும் லாரி கேட்டுள்ளேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்ற பெயர் உள்ளது. ஆனால் சரக்கு என்றால் அந்த சரக்கு இல்லை என அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வேலைகள் இன்னும் நிறைய உள்ளது. வீடு இனி வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க வேண்டும். பலாப்பழம் சின்னம் கொடுத்தால் பலாப்பழத்தை தலையில் வைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று ஓட்டு பிச்சை கேட்பேன். அப்படி கேட்டு தான் இன்று பலரும் பதவிகளை அடைந்துள்ளார்கள் என அவர் கூறியுள்ளார்.