மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உதயநிதியை தூக்கி வைத்து கொண்டாடுவது ஏன்?.. உண்மையை உடைத்த சுப. வீ..! திமுகவை மேடையில் புகழ்ந்து தள்ளிய திக..!
அனைவருக்குமான திராவிட மாடல் ஆட்சியில், அனைத்து மக்களுக்காகவும் உழைப்பதே திராவிட ஆட்சி ஆகும். கட்சியின் எதிர்காலத்திற்காக நாங்கள் உதயநிதியை வளர்த்து வருகிறோம் என திக சுப. வீ பேசினார்.
திமுக சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திராவிடர் கழக சுப. வீரபாண்டியன், "பாஜகவின் நோக்கம் திமுகவை எதிர்ப்பது, அதிமுகவை அழிப்பது. தமிழகத்தை மட்டுமல்லாது அதிமுகவையும் காக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அவர்களுக்கு தாங்கள் அழிக்கப்படுவது புரிகிறதா? என்பது தெரியவில்லை.
அதிமுகவில் பொதுக்கூட்டம் கூட நடத்த முடியவில்லை. நாம் பல புயல்களை கடந்து நிற்கிறோம் என்றால், நமது கொள்கை வேறாக இருந்து, தகுதிவாய்ந்த தலைமை அடிமரமாக தாங்கி அமைப்புகளை கட்டமைத்து நிற்கிறது. நாம் நமது கொள்கையில் பயணிக்கிறோம்.
திமுக இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது. வாழையடி வாழையாக தொண்டர்களும், தலைவர்களும் வருகிறார்கள். திமுகவுக்கு கிடைத்த தொண்டர்களை போல வேறு கட்சிக்கும் தொண்டர்கள் கிடைத்தது இல்லை. மதத்தை நம்புவோரையும், நம்பாதோரையும் அரவணைத்து செல்வதே நமது திராவிட மாடல் ஆட்சி. நாம் ஜாதி பாகுபாடு இன்றி உழைப்பதே திராவிட மாடல்.
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள் என அத்தனை வாய்ப்புகளும் அனைவர்க்கும் தரப்படும். திராவிட மாடல் அரசை காப்பாற்றுவது, அதற்கு தூணாக இருப்பது நமது கடமை.
அதனாலேயே உதயநிதியை தோளில் தூக்கி வைக்கிறோம். என் பிள்ளையை நாங்கள் வாழ்த்துகிறோம். நாங்கள் பெரியாரையும், உதயநிதியையும் வாழ்த்துவோம். பல கட்சிகள் தோன்றி மறைந்து இருக்கலாம். நாம் எப்படி இருக்கிறோம். இன்று வரை வேரூன்றி இருக்கிறோம்" என்று பேசினார்.