3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
தமிழகத்தையே உலுக்கிய கொடநாடு விவகாரம்.. சசிகலா பரபரப்பு பேச்சு.. ஆடிப்போன அரசியல் வட்டாரம்.!
கொடநாடு வழக்கில் காவல்துறை கேட்ட அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரிடம் பலவிதமான கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான காவல்துறையினர் கோடநாடு கொலை- கொள்ளை வழக்கு குறித்து சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சசிகலா அளித்த பதில்களை வாக்குமூலமாக பெற்று பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றுள்ளது. காலை 10 மணியளவில் தொடங்கிய விசாரணை பிற்பகல் 2 மணியளவில் நிறைவு பெற்றது. இந்த நிலையில் விசாரணை முடிந்ததும் சசிகலா கூறியதாவது ;
"கொடநாடு வழக்கு குறித்து காவல்துறையினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி விட்டதாகவும், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்" என்பதையும் தெரிவித்துள்ளார்.
மேலும், "முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்துள்ளனர்" என கூறியுள்ளார்.
"இதனால் உரிய விசாரணை மேற்கொண்டு யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன் காவலாளி ஓம் பகதூர் மற்றும் தாய், குழந்தை மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.