"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
ஆட்டு குட்டிக்கு அபிராமி என பெயர் வைத்து., அபிராமியிடம் ஒப்படைத்த அண்ணாமலை.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர் ஒருவர் ஆட்டுக்குட்டியை பரிசாக கொடுத்துள்ளார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் 'என் மண் என் மக்கள்' எனும் பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றார். அப்போது அவர் பொது மக்களிடம் பேசிய நிலையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி புதுக்கோட்டையை மாவட்டமாக அறிவித்த பொழுது தமிழக அரசுக்கு அரண்மனையை செய்து சாப்பிட்டால் புதுக்கோட்டை மன்னர் கொடுத்தார்.
ஆனால், அந்த மன்னருக்கு இன்னும் மணி மண்டபம் அமைக்கப்படவில்லை. மேலும் புதுக்கோட்டை தொகுதியில் நாடாளுமன்ற தொகுதி ஒன்று கூட இல்லை. இதற்கு பாஜக சார்பாக தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது."என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலைக்கு ஒரு பாஜக தொண்டர் ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட அண்ணாமலை அந்த ஆட்டு குட்டிக்கு அபிராமி என்று பெயர் வைத்தார். அதன் பின்னர் அந்த ஆட்டுக்குட்டியை அங்கிருந்த அபிராமி என்ற பெண்ணிடம் கொடுத்து அதை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.