பாரத பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ராகுல்காந்தி.! வைரலாகும் ட்விட்டர் பதிவு!



rahul gandhi wishes to PM modi

இன்று செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடிக்கு 70வது பிறந்த தினம். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாரத்தை சேவை வாரமாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் இந்த வாரம் முழுதும் தங்களை மக்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.