மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அ.தி.மு.க வில் கலவரம்; தலைமை அலுவலகம் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது: பரபரப்பு பின்னணி..!
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று காலை அக்கட்சியின் இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலால், அப்பகுதியில் பெரிய அளவிலான பதற்றம் உருவானது. தலைமை அலுவலகத்தின் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டன. அதன் பின்னர் அங்கு வந்த ஒருங்கிணைப்பாலர் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இருந்தார். அவர் சற்று நேரத்திற்கு முன் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
இதற்கிடையே, ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு இடையிலான மோதலில் பலர் காயமடைந்தனர். அ.தி.மு.க தலைமை கழக அலுவகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்த அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4 மாதங்களில் அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க தலைமை கழக அலுவலகம் வருவாய் துறையினரால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமை கழகத்தில் உள்ள அனைத்து அறைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீண்டும் மோதலில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் அ.தி.மு.க தலைமை கழக அலுவலகம் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க தலைமை கழக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.