மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருவாரூர் இடைத்தேர்தலில் வென்றே தீருவேன்!. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்!.
தமிழகத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவராக இருந்து வந்த கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
முன்னாள் முதலர்வர் கருணாநிதியின் தொகுதி என்பதால் பல்வேறு கட்சிகளும் தன் வசம் அந்த தொகுதியை இழுக்க முயற்சித்து வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் பரிசீலனையும், அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணலும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்பட உள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திருவாரூர் தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் ஹமீது போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய புரட்சியாளர் லெனின் கூறிய ”வெல்ல முடியாத படை என்று வரலாற்றில் ஒன்றும் இல்லை”என்ற வாக்கியத்தை குறிப்பிட்டு தன்னால் வெற்றிபெற இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.