மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினகரனுக்கு பேரிடி; அதிமுகவிற்கு அவமானம்: திமுகவில் இணையும் செந்தில் பாலாஜி!!
அதிமுக முன்னாள் அமைச்சரும், தினகரனின் நம்பிக்கைகுரிய ந்பரனாக செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்களும் தகவல்களும் கிடைத்துள்ளன.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த அரசியல் பிரச்சனைகளால் டிடிவி தின்கரன் ஆதரவாளராக அவருக்கு நம்பிக்கையானவராக் உருவாகினார்.
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரன் அணிக்கு எதிராக வந்ததாலும், தினகரனின் சில செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதாலும் இவர் திமுகவில் இணைய உள்ளார் என கூறப்பட்டது.
தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆ.ராசா மற்றும் செந்தில் பாலாஜி ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
டிடிவி அணியில் இருக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏக்களை திமுகவில் சேர்க்கும் முயற்சியில் அன்பில் பொய்யாமொழி ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வரும் 16ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வின் போது, செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் அவர் நாளையே திமுகவில் சேர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அமமுகவின் தங்கதமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார். இதுகுறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது என இன்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி பற்றிய உங்களின் கருத்துகளை கீழே பதிவு செய்யவும்.