போட்டியின்றி ஸ்டாலின் திமுக தலைவராக நாளை பதவி ஏற்கிறார்
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் செவ்வாய்கிழமை தேர்வு செய்யப்படுகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக தலைவர், பொருளாளர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்பப் பெறும் அவகாசம், பகல் 1 மணியுடன் முடிவடைந்தததாக தெரிவித்தார்.
அதன்படி திமுக செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டனர். நேற்றைய தினம் இரு பதவிகளுக்கும் ஸ்டாலின், துரைமுருகனை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் அவர்கள் போட்டியிட்ட பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் மனுக்களை இருவரும் வாபஸ் பெறாததால் திமுக பொருளாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர் எஸ் பாரதி கூறுகையில் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்கள் மனுக்களை வாபஸ் பெறும் காலம் முடிந்தும் அவர்கள் இருவரும் வாபஸ் பெறவில்லை மனுக்களை வாபஸ் பெறாததால் இரு பதவிகளும் போட்டியின்றி நிரம்புவது உறுதியாகிவிட்டது.
நாளை திமுக பொதுக்குழுவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிடுவார் என்றார் ஆர்.எஸ்.பாரதி.