#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை; மருத்துவ நெருக்கடியா? ஸ்டாலினுக்கு விஜயபாஸ்கர் பதிலடி!
அமைச்சர் விஜயபாஸ்கர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு விடுத்துள்ள ஒரு அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த முடியாத திமுக தற்போது மருத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களினால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழகத்தின் மருத்துவ குறைபாடுகளை பற்றி விமர்சித்து வருகிறார்.
இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் மருத்துவ நெருக்கடி போன்ற சூழல் இல்லை. பருவக்காலக் காய்ச்சல்கள் அதிகமாக இருந்தன, நவம்பர் மாதம் அது குறைந்துவிட்டது. டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25% குறைந்துவிட்டது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலோ அல்லது அரசு மருத்துவமனையில் இலவசமாகவோ சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எங்களிடம் தேவையான மருந்துகள் உள்ளன. நலத்திட்ட நிதி அல்லது மாநில காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்காலிக பணியாளர்களை பணியமர்த்த மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த முடியாததால், மருத்துவ நெருக்கடி ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த திமுக தலைவர் முயற்சித்து வருகிறார்,” என தெரிவித்துள்ளார்.