மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பி.எஃப்.ஐ அமைப்பை கலைத்த மாநில பொதுச் செயலாளர்: விடாமல் துரத்தி கைது செய்த போலீசார்..!
கேரள மாநிலத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பி.எஃப்.ஐ அமைப்பு கலைக்கப்பட்டதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நாட்டின் சட்டத்தை ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்படுகிற குடிமக்களாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவை அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. இதன் காரணமாக பி.எஃப்.ஐ அமைப்பு முற்றிலுமாக கலைக்கப்பட்டு விட்டது என்று அமைப்பின் உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்தில் அப்துல் சத்தார் கருநாகப்பள்ளி பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கதுறையினரின் சோதனைக்கு பின்னர் கடந்த 23 ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த அவர் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.