96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இது நம்ம வீட்டு பங்க்சன்.. பாஜக மாநில இளைஞரணி தலைவரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இருபெரும் சூப்பர்ஸ்டார்கள்.! நெகிழ்ச்சியில் வினோஜ்.!
தனது வீட்டு நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த தனது இருபெரும் சூப்பர்ஸ்டார்களுக்கு நன்றி தெரிவித்து வினோஜ் சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவராக பணியாற்றி வருபவர் வினோஜ் பி செல்வம் (Vinoj P Selvam), இவர் தொழிலதிபரும் ஆவார். தனது 21 வயதில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கிய வினோஜ் செல்வம், தென் சென்னை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணி மாநில செயலாளர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியதை தொடர்ந்து தற்போது மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
தொழிலதிபரான இவர் சென்னையில் உள்ள செக்கர்ஸ் நட்சத்திர விடுதி, ரோகிணி விடுதி ஆகியவற்றின் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். இது தவிர்த்து பல தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார். இதன் வாயிலாக பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி இருக்கிறார். தற்போது வினோஜ் பி செல்வத்தின் வீட்டில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அதற்காக பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். அதன் பெயரில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) ஆகியோர் நேரில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள வினோஜ் செல்வம், இரண்டு சூப்பர் ஸ்டாரின் கதை என்ற தலைப்புடன் அதனை பதிவிட்டிருக்கிறார்.
The tale of two Superstars. @rajinikanth @annamalai_k pic.twitter.com/s1JwGN18Td
— Vinoj P Selvam (@VinojBJP) February 21, 2024
சூப்பர்ஸ்டார் தங்களின் குடும்ப விழாவில் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினோஜ் பி செல்வம் இடுகையிட்ட பதிவு உங்களின் பார்வைக்கு: