பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.! 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.!
அதிமுக பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யும் தீர்மானம் உள்ளிட்ட 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும், இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான விவாதமும், அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பற்றிய விவாதமும் இன்றைய பொதுக்குழுவில் நடைபெற்றது.
இன்று நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக அதிமுக வரவு செலவு கணக்கை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 4 மாதங்களில் பொதுக் குழு செயலாளர் தேர்தல் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.