Good Bad Ugly: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படம்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#JustIn: விஜயகாந்துக்கு கொரோனா தொற்று.. செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை.! அவசர அவரசமாக புறப்பட்ட பிரேமலதா.!!
தேமுதிக தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் நேற்று உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு விஜயகாந்த் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்ததை தொடர்ந்து, தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாகவே அவர் சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல உடல் நலத்துடன் இருந்துவந்த கேப்டன் விஜயகாந்த், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பின்னர் அரசியல் ரீதியான பயணங்களை குறைத்துக் கொண்டு முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
அவரது மனைவி மற்றும் மகன்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜயகாந்துக்கு சிகிச்சையளிக்கும் மியாட் மருத்துவமனைக்கு பிரேமலதா விஜயகாந்த் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.