மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்சியை தக்கவைக்கிறதா பா.ஜனதா?: வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்..!
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தர்நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருப்பதால் காலை 9 மணிமுதல் முன்னிலை நிலவரங்களும் பிற்பகலில் முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை அங்கு கடந்த 25 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 1 ஆம் தேதி முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இறுதிகட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
25 ஆண்டுகாலம் குஜராத் மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆட்சி பொறுப்பில் இருந்து வருவதாலும், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு சொந்த மாநிலம் என்பதாலும் அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜனதா கட்சி வரிந்து கட்டியது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ ஏஜண்டுகளின் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களின் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விபரங்கள் வெளியாக தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.