மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. இவருமா.!! ஐபிஎல் ஏலத்தில் முக்கிய வீரர்களை அடிப்படை விலைக்கு கூட எடுக்க முன்வரவில்லை.!
2022 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த மெகா ஏலத்தில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி, ரூ.1½ கோடி, ரூ.1 கோடி, 75 லட்சம், 50 லட்சம், 40 லட்சம், 30 லட்சம், 20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தின் போது திறமை வாய்ந்த வீரர்களை அணி நிர்வாகங்கள் தங்கள் அணிக்காக போட்டி போட்டுக்கொண்டு எடுத்து வருகின்றனர். இந்தநிலையில், சில முக்கியமான நட்சத்திர வீரர்களை அடிப்படை விலைக்கு கூட யாரும் எடுக்க முன்வரவில்லை.
அந்த வகையில், சென்னை அணியில் பல ஆண்டுகளாக விளையாடிவந்த சுரேஷ் ரெய்னாவை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. அவரை சென்னை அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அதேபோல ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் கடந்த சீசன்களில் டெல்லி, ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித்தை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. மேலும், பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை.