#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வழி விடுவாரா வருண பகவான்?!.. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2 வது டி-20 போட்டி இன்று தொடக்கம்..!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், டி-20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் வெலிங்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடக்க இருந்த முதல் டி-20 போட்டி மழையின் காரணமாக டாஸ் கூட போடப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி-20 போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கவுள்ளது.
முதல் போட்டியை போலவே 2 வது போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டி-20 போட்டிகளை பொறுத்தவரை, இவ்விரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 11 போட்டிகளில் இந்திய அணியும், 9 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த போட்டிக்கான இந்தியா-நியூசிலாந்து அணிகளின் உத்தேச பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா: இஷான் கிஷன், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது தீபக் ஹூடா அல்லது சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல்.
நியூசிலாந்து: டெவன் கான்வே, பின் ஆலென், கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, ஆடம் மில்னே, லோக்கி பெர்குசன்.