#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மாற்றம்! ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு அணி வீரர்களுமே வெள்ளை அல்லது பழுப்பு நிறத்திலான பெயரில்ல்லாத சீருடைகளை அணிந்து வருவது தான் வழக்கமான ஒன்று. தற்போது அந்த சீருடைகளில் வீரர்களின் பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1877 ஆம் ஆண்டு மெல்பெர்னில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து இன்று வரை அனைத்து டெஸ்ட் போட்டிகளிலுமே இரு அணி வீரர்களும் வெள்ளை அல்லது பழுப்பு நிறத்திலான பெயர் பொறிக்கப்படாத சீருடைகளையே அணிந்து விளையாடி வருகின்றனர்.
142 வருடங்களாக கடைபிடித்து வரும் இந்த வழக்கத்தை மாற்றி, வீரர்களின் சீருடைகளளில் அவர்களது பெயர் மற்றும் அவர்களுக்கான எண்களை பொறித்துக்கொள்ள அனுமதி அளிக்குமாறு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டுள்ளன. ஆனால் இதுவரை ஐசிசி இதனை அங்கீகரிக்கவில்லையாம்.
இந்த மாற்றங்களை செய்தால் வீரர்களை மைதானத்தில் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும், ரசிகர்களுக்கும் தங்களுக்கு பிடித்தமான வீரர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். மேலும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் போல் வீரர்களுக்கான எண்கள் கொடுக்கப்பட்டால் அவர்களை எளிதில் வகைப்படுத்தவும் முடியும் என இருநாட்டு நிர்வாகமும் ஐசிசிக்கு விளக்கமளித்துள்ளன.
இந்நிலையில், இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்கும்பட்சத்தில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்கவிருக்கும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் புதிய சீருடையுடன் களமிறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியாகவும் இது கருதப்படுகிறது.