இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு! 2வது நாள் முடிவில் ஆஸி அணி 59 ரன்கள் பின்னிலை



Adelide test 2nd day uppdate

விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள  இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று அடிலெய்டில் துவங்கியது.

test match

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கை துவங்கிய இந்திய அணியில், லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் துவக்க ஆட்டக்காரர்களா களம் இறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் தடுமாறி இருவருமே கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இந்நிலையில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் புஜாரா மட்டும் சிறப்பாக ஆடி 123 ரன்கள் எடுத்த புஜாரா கம்மின்ஸின் சிறப்பான பீல்டிங்கால் ரன் அவுட்டானார். 

test match

இதனையடுத்து இன்று துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே சமி அவுட்டாக இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

அதனைத்தொடரந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தார் இஷாந்த் ஷர்மா. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பின்ச் ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் ஷர்மா பந்தில் போல்டானார். 

test match

பின்னர் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய மாரிஸ்,  கவாஜா,  ஷான் மார்ஷ் விக்கெட்டுகளை அஸ்வின் தனது சுழலில் விழவைத்தார். அதனைத்தொடரந்து வந்த ஹான்ஸ்கோம்ப் 34 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். அதன்பிறகு கேப்டன் பெயின் மற்றும் கம்மின்ஸ் சொற்ப ரன்களில் அவுட்டாக ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ள. 

test match

அந்த அணியின் பேட்ஸ்மேன் ஹெட் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 61 ரன்களுடன் அவுட்டாகாமல் உள்ளார். 

இந்திய அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.