மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோனிக்கே சீனியர் தினேஷ் கார்த்திக்... ஆனால் எப்படி கலக்குறாரு பார்த்தீர்களா..! சிங்கத்தமிழனை புகழ்ந்த ஜாம்பவான்.!
இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி இந்திய அணியில் அறிமுகமாகி சில வருடங்களிலேயே தனது திறமையால் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாகவும் விளையாடி பெரிய அளவில் ரன்களை குவிக்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை மாற்றிய பெருமை தோனியையே சேரும்.
தோனி 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின்போது இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, கோப்பையையும் பெற்றுக்கொடுத்து சாதித்தார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வினை அறிவித்து ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மட்டுமே வழிநடத்தி வந்தார்.
இதனையடுத்து தோனியைப் போல தினேஷ் கார்த்திக்கும் ஓய்வினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மூலம் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். இந்தநிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கும் ஆசியக் கோப்பை, அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் தினேஷ் கார்த்திக்கு இடம் உறுதி எனக் கூறப்படுகிறது.
தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய இந்திய அணி முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, தினேஷ் கார்த்திக் தோனிக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, இத்தனை வருடத்திற்கு பிறகும், தோனி ஓய்வு பெற்றப் பிறகும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறார். இது சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளவே முடியாது. அவர் எந்த அளவுக்கு உழைத்திருப்பார் என யோசித்துப் பாருங்கள். தினேஷ் கார்த்திக் நினைத்திருந்தால் வர்ணனையாளராக செயல்பட்டு, சுலபமாக வருமான ஈட்டியிருக்கலாம். ஆனால், அவர் தனது லட்சியத்தை முதன்மைப்படுத்தி, இன்று சாதித்து காட்டி அசத்தியுள்ளார் என புகழ்ந்து பேசியுள்ளார்.