பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கவலைப்படாம ஆடு மாமா.. போட்டிக்கு நடுவே தமிழில் பேசிய அஸ்வின்.. வைரல் வீடியோ காட்சி..
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின்போது தமிழக வீரர் அஸ்வின் சக வீரர் ஹனுமா விஹாரியிடம் தமிழில் பேசிய வீடியோ காட்சி வெளியாகி வைரலாகிவருகிறது.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டி, T20 தொடரை அடுத்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்துள்ளது. 407 என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதனால் கடைசி நாளான இன்று, இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து எப்படியும் இந்த போட்டியில் தோல்வி அடைந்துவிடும் என கூறப்பட்டநிலையில், ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
குறிப்பாக இந்திய அணி வீரர்கள் அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டனர். இதனிடையே போட்டியின்போது விஹாரிக்கு தொடைப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டு, பின் வலிநிவாரணி எடுத்துக்கொண்டு அவர் விளையாடினார்.
இந்நிலையில் போட்டியின் போது விஹாரியிடம் அஸ்வின் தமிழில் பேசிய காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. பேட்டிங் செய்துகொண்டிருந்த விஹாரியிடம், "கவலைப்படாம ஆடு மாமா, ஆடு..பால் வெளியேதான் போகும்.. பத்து பத்து பாலா போவோம்.. நாப்பது பால் தான் மொத்தம் இருக்கு" என கூறியுள்ளார். இந்த ஆடியோ ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது வைரலாகிவருகிறது.
Ashwin talking in Tamil with vihari:
— M2 (@emmcesquared) January 11, 2021
P.S. @prithinarayanan please give our love to @ashwinravi99 pic.twitter.com/x5ZU0ls4ZF