6 மாதத்திற்கு முன்னே உலகக் கோப்பை முடிவுகளை புட்டு புட்டு வைத்த ஜோதிடர்! அதிர்ச்சி வீடியோ!



astrologer talk about world cup


இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 2019 ஆம் ஆண்டு ராசி பலன் பற்றி கூறியிருந்தார், ஜோதிர் பாலாஜி. அந்த நிகழ்ச்சியில் அவரிடம் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜோதிடர் பாலாஜி இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனாலும் எனது கணிப்பை கூறிகிறேன். அது நடப்பது கிரகத்தின் கையில் தான் இருக்கிறது. இந்த ஆண்டு கணிப்பின் படி, 2019 உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டில் நடக்கிறது.

இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேற வாய்ப்பு உள்ளது. அரையிறுதியில், இந்தியா, நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணியுடன் மோதும்.



 

அதில், நியூசிலாந்து அணி வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன், தொடர் நாயகனாக தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது.
 
இந்த தொடரில் நியூசிலாந்து அணி தான் 2019 உலகக் கோப்பையை கைப்பற்றும், வில்லியம்சன் தான் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கணித்துள்ளார். இந்தநிலையில் தற்போது வரை ஜோதிடர் கணித்த படியே உலகக் கோப்பையின் முடிவுகள் வந்துள்ளதால் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.