மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடித்து நொறுக்கிய பின்ச், மேக்ஸ்வெல்.. நியூசிலாந்திற்கு எதிராக ஆஸ்திரேலியா அபார வெற்றி!
நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வென்று தொடரில் முன்னிலையில் உள்ளது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பின்ச் 44 பந்துகளில் 69 ரன்களும், மேக்ஸ்வெல் 31 பந்துகளில் 71 ரன்களும் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.1 ஓவரிலேயே அணைத்து விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டும் எடுத்தது. கப்டில் அதிகபட்சமாக 43 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலியா அணியின் அகர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.