மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 வது இடத்தை தக்கவைக்குமா சென்னை அணி..?!! ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்..!!
சென்னையில் நடைபெறும் 29 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 28 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று இரவு சென்னையில் நடைபெறும் 29 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்று லக்னோ, மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா 1 தோல்வியுடனும் 6 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் 3 வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, அஜின்கியா ரஹானே, ஷிவம் துபே உள்ளிட்டோரும் பந்து வீச்சில் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, மகேஷ் தீக்ஷனா, பதிரானா உள்ளிட்டோர் அணிக்கு வலுசேர்க்கிறார்கள்.
ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்று பஞ்சாப், கொல்கத்தா அணிகளுடன் வெற்றியும் ராஜஸ்தான், லக்னோ மற்றும் மும்பை அணிகளுடன் தோல்வியடைந்ததன் மூலம் 4 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணியின் நிலையற்ற பேட்டிங் வரிசையால் பின்னடைவை சந்தித்து வருகிறது.
மெதுவான தன்மை கொண்ட எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சுழற்பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இரு அணிகளும் அதில் அதிக கவனம் செலுத்தும். இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 18 முறை மோதியதில் சென்னை 13 முறையும் ஐதராபாத் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.