#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடுத்த வருட சென்னை அணியின் கேப்டன் யார்.? சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி ஓப்பன் டாக்.!
ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்நிலையில் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் தோனியின் போதாமையே காரணம் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அடுத்த ஆண்டு சென்னை அணியின் கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சும் எழுந்தது.
இந்தநிலையில் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், 2021 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை தோனி வழி நடத்துவார் என உறுதியாக நான் நம்புகிறேன். அந்த அணிக்கு மூன்று ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை பெற்றுத் தந்தவர் கேப்டன் தோனிஆவார். இந்தாண்டு மோசமாக இருந்ததன் காரணமாக ஒட்டுமொத்தமாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என அவசியமில்லை. அணி கேப்டனை மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, அடுத்த ஆண்டும் கேப்டனாக தோனியே தொடர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என கூறியுள்ளார்.