மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னரின் டிக்டாக் வீடியோ! புகழ்ந்து தள்ளும் ரசிகர்களும், வீரர்களும்!
பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதும், அவர்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவதும் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.
இந்தநிலையில், கடந்த மாதம் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் வார்னர் பிரபலமான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் இந்தி பாடலுக்கு அவர்தன் மனைவி மற்றும் குழந்தைகளும் வீடியோவில் அசத்தினார். அவருடைய சமீபத்திய வீடியோவை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கிண்டல் செய்துள்ளார். மிட்செல் ஜான்சன் வார்னரின் சமீபத்திய டிக்டாக் வீடியோவைப் பார்த்த பிறகு அவரை ட்ரோல் செய்து, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல்லில் சன்ரைஸர்ஸ் அணியில் விளையாடிய வார்னர் அந்த அணிக்காக சிறப்பாக ஆடினார். அந்த அணி கோப்பையை கைப்பற்றியதற்கு வார்னர் முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ இந்திய ரசிகர்களையும் மகிழ்வித்துள்ளது. ரசிகர்கள் பலர் அந்த வீடியோவிற்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இதற்கு நகைச்சுவையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.