தமிழக வீரரை புறக்கணித்த கோலி? சரியான பதிலடி கொடுத்த ரஹானேவுக்கு குவியும் பாராட்டு.!



fans-appriciate-to-rahane

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 195 ரங்களும், அதன் பின் ஆடிய இந்திய அணி நேற்று முந்தின ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ஓட்டங்களும் எடுத்தது.

இந்த தொடரில் விராட் கோலி, அஸ்வினை சரியாக பயன்படுத்தவில்லை, முதல் டெஸ்ட்டில் அஸ்வினை நன்றாக பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், விராட் கோலி நாடு திரும்பிய நிலையில், ரஹானே தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக உள்ளார். அவர் அஸ்வினை 15 ஓவர் குள்ளே கொண்டு வந்து பந்து வீசி, முக்கிய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தினார்.

rahane

இதனால் ரசிகர்கள் உட்பட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரஹானேவின் கேப்ட்ன்சிப்பை பாராட்டி வருகின்றனர். விராட் கோலி கேப்டனாக இருக்கும் போது அஸ்வினுக்கு 30 ஓவர்களுக்கு பின்தான் பவுலிங் கொடுப்பார். தற்போது கோலி இல்லாத நிலையில் அஸ்வினை ரஹானே நன்கு பயன்படுத்தி உள்ளார். 

இந்தநிலையில் தற்போது அஸ்வின் தனது திறமையை நிரூபித்து பதிலடி கொடுத்துள்ளார். முதல் இன்னிங்சின் முதல்நாள் ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். மூன்றாவது நாளான இன்றும் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மார்னஸ் லபுஸ்சாக்னே விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.