அழகாக வந்த விக்கெட்; கோட்டை விட்ட பாகிஸ்தான்.. பீல்டிங் ல இன்னும் நிலை மாறவில்லை.!



IND VS PAK Match Catch Missing by PAK Fielders 

 

ஆசிய கோப்பை 2023 போட்டித்தொடர் இலங்கையில் வைத்து நடைபெறுகிறது. இன்று நடைபெறும் ஒருநாள் போட்டித்தொடர் ஆட்டத்தில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. பாகிஸ்தானை பொறுத்தமட்டில் பேட்டிங், பவுலிங் விஷயத்தில் சிறந்து இருப்பார்கள். 

ஆனால், பீல்டரிங் விஷயத்தில் அவர்களின் நம்பிக்கை எப்போதும் கேள்விக்குறியாகத்தான் இருந்திருக்கிறது. களத்தில் எதிரிகளின் விக்கெட்டுகளை கேட்சில் வீழ்த்துவதில், சிலநேரம் பலரும் விமர்சனம் செய்யும் அளவு செயல்படுவார்கள்.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் நஸீம் ஷா வீசிய பந்தை எதிர்கொண்ட ஷுப்மன் ஹில், முதல் இரண்டு ஸ்லிப் பீல்டர்களுக்கு இடையே அடித்தார். அப்போது அங்கு இருந்த இருவரும் கேட்சை தவறவிட்டனர். 

இன்று நடைபெறும் ஆட்டத்தில் மழை குறுக்கீட்டுள்ளதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 24.1 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் விராட் கோலி - கே.எல் ராகுல் ஜோடி இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் 49 பந்துகளில் 56 ரன்னும், ஹில் 58 பந்துகளில் 52 ரன்னும் அடித்து அவுட்டாகி வெளியேறியுள்ளனர்.