மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விராட் கோலி, ரிஷப் பண்ட் இல்லை... இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி.! வெற்றி யாருக்கு.?
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடர் இன்று உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்றிரவு (வியாழக்கிழமை) நடக்கிறது.
இன்று நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு நிலையில் கேஎல் ராகுல், அக்ஸர் படேல், சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் ஆகியோர் விலகியுள்ளதால் இப்போட்டியில் இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பியுள்ள ரவீந்திர ஜடேஜாவின் வருகை அணிக்கு மேலும், வலு சேர்க்கும். பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே தற்போது அனுபவசாலிகள். இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோர் சிறப்பாக ஆடவேண்டிய சூழ்நிலை உள்ளது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா அல்லது யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் அல்லது ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார் அல்லது அவேஷ்கான்.
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், கமில் மிஷாரா அல்லது சன்டிமால், சாரித் அசலன்கா, ஜனித் லியானாஜ், தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, மகீஷ் தீக்ஷனா, லாகிரு குமாரா.