மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய வீரர்களுக்கு வாய்ப்பு.? ஷிகாரு... உஷாரு.! தொடரை கைப்பற்றுமா இந்திய அணி.!
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இந்த ஆட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்திருக்க வேண்டிய நிலையில், இந்திய ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு நேற்று நடந்தது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியை இந்தியாவும், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியை இலங்கையும் வென்றது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் கடைசிப் போட்டியை வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். நேற்றய போட்டியில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள், 6 பவுலர்களுடன் களமிறங்கியது. நேற்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் மட்டுமே கடைசி வரை ஆடியும் போதிய ரன்கள் எடுக்கமுடியவியலை 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் தான் இந்தியாவின் வெற்றி பறிபோனது.
ஆனாலும் 132 என்ற வெற்றி இலக்கையே இலங்கை பேட்ஸ்மேன்கள் 6 விக்கெட்டுகளை இழந்த பின்புதான் கடைசி ஓவரில் எட்ட முடிந்தது. இன்றைய போட்டியில் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இன்றைய அணியில் இடம்பெறுவார்கள் என்றே தெரிகிறது. நேற்று செய்த தவறுகளை செய்யாமல் இந்திய அணி ஆடினாலே தொடரை எளிதாக கைப்பற்றலாம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.