மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நியூசிலாந்து அணியை அடித்து நொறுக்கி தொடரை வென்ற இந்தியா!! ஆட்டநாயகன், தொடர் நாயகன் யாருக்கு தெரியுமா??
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது.
சென்ற போட்டியில் மிக மோசமாக தோல்வியுற்ற இந்திய அணி மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த தோனி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த சமி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் கலீல் அஹ்மது மற்றும் குல்தீப் யாதவிற்கு பதிலாக களமிறங்குகியுள்ளனர்.
துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆரம்பமுதலே தடுமாறினர். மேட் ஹென்றி வீசிய 5-வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரோகித் சர்மாவும், போல்ட் வீசிய அடுத்த ஓவரிலேயே 6 ரன்கள் எடுத்து ஷிகர் தவனும் அவுட்டாகினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய இளம் வீரர் சுபம் கில் இந்த ஆட்டத்திலும் தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்த தவறவிட்டு 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்துள்ளார். அடுத்து களமிறங்கிய தோனி வந்தவேகத்திலேயே ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.
10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்திய அணியை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ராயுடு மற்றும் விஜய்சங்கர் காப்பாற்றினர். நேர்த்தியாக ஆடிய இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களை குவித்தனர். சறப்பாக ஆடிய விஜயசங்கர் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து 45 ரன்னில் ரன் அவுட்டானார்.
அதனைத்தொடர்ந்து அரைசதமடித்த ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவும் அதிரடியாக ஆட அணியின் எண்ணிக்கை உயர துவங்கியது. ஆனால் 90 ரன்கள் எடுத்து ராயுடுவும், 34 ரன்கள் எடுத்து ஜாதவும் அவுட்டாகினர்.
அடுத்து வந்த ஹார்டிக் பாண்டியா 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து புவனேஷ்வர் 6 ரன்னிலும், சமி ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சில் திணறியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில் 217 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் இந்த தொடரை இந்திய அணி 4 க்கு 1 என்ற கணக்கில் வென்றது. ஆட்டநாயகனாக அம்படி ராயுடு தேர்வு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் ஷமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.