'என்னிடம் கேட்டுவிட்டா என்னை நீக்கினார்கள்' தல தோனியை மறைமுகமாக சாடுகிறாரா விரேந்திர சேவாக்.!



indian cricket team - m.s dhoni - virendira shewaugh

தல தோனி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆரம்ப காலகட்டங்களில் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார். அதன் பிறகு மிகவும் குறுகிய காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அக்காலகட்டத்தில் இந்திய அணிக்கு சேவாக், சச்சின் கம்பீர், யுவராஜ், ஜாகிர் கான், ஹர்பஜன் போன்றோர் முன்னணி வீரர்களாக திகழ்ந்தார்கள்.

தோனி கேப்டனாக பதவிவகித்த சில காலங்களிலேயே இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சீனியர் வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு வந்தார்கள் என்ற விமர்சனங்களும் அப்போது எழுந்தது. அது இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

indian cricket

ஆனாலும் தோனியால் கட்டமைக்கப்பட்ட இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணி வெற்றிகளைக் குவித்து பல தொடர்களை வென்றது. தொடர்ந்து T-20 , உலகக் கோப்பை ஆசிய கோப்பை போன்ற கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக விளங்கியது. ஆனால் சமீபகாலமாக தல தோனியின் செயல்பாட்டை முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் விமர்சித்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தல தோனியின் ஓய்வு குறித்து கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் செய்தி சேனலின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேவாக் இந்திய அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

indian cricket

நான் அணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டேன். ஆனால் அதில் வெளிப்படை தன்மை இல்லை. என்னை அணியில் இருந்து நீக்கும் போது என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அதற்கு முன்பெல்லாம் வீரர்களை நீக்கினால் அவர்களிடம் தெரிவிக்கப்படும்.

ஆனால் 2007க்கு பின்பெல்லாம் அப்படி நடக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் மூத்த வீரர்களை நீக்க அணி நிர்வாகம் பெரிய அளவில் யோசிக்கிறது. இந்திய அணியை எதிர்காலத்திற்காக தயார் செய்ய வேண்டும் என்றால் நாம் கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.

indian cricket

அணியும், தேர்வு கமிட்டியும் ஆலோசனை செய்ய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார். இவர் தோனியை தாக்கித்தான் இப்படி பேசி உள்ளார். தோனியை பதவி விலக செய்ய இவர் மறைமுகமாக நெருக்குகிறார் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.