மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டி-20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து, முதலிடத்தை பிடித்தது இந்திய அணி!
ராஜ்கோட்டில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் வெற்றிப்பெற்றதின் மூலம் சர்வதேச டி-20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை இந்திய அணி முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. தற்போது இரு அணிகளுக்கிடையேய T20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது, நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிபெற்றது.
நேற்று முன்தினம் நிகழ்த்திய இந்திய அணியின் வெற்றி டி-20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது இந்திய அணி பெற்ற 41வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 40 வெற்றிகள் பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து, சேஸிங்கின் போது அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் பட்டியலில் இந்திய முதலிடத்தை பிடித்துள்ளது.
இதுவரை டி-20 போட்டியில் 61 முறை வெற்றி இலக்கை சேஸ் செய்துள்ள இந்திய அணி 41 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. ஆஸ்திதிரேலியா 69 போட்டியில் 40 முறை வெற்றிப்பெற்றுள்ளது.